யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அறவாழ்வு வாழ்ந்து அரும்பணிகள் புரிந்து
உறவோடு உயர்ந்து உரமிட்டு உழைத்து
சிறந்தோங்கிப் பலர் வாழ சிறப்புக்கள் பல செய்து
வற்றாத ஊற்றாய் வள்ளல் குணங்கள்
சொத்தாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து
எம் உள்ளத்துள் உறையும் தெய்வமாய் ஆன
எங்கள் தந்தையை என்றும் தொழுதிடுவோம்
சிவனடி சேர்ந்தவரை நிதமும் வணங்கிடுவோம்.
எங்கள் தந்தையின் பிரிவின் போது தேடிவந்து துயர்பகிர்ந்தும் பல்வேறு வழிகளில் உதவி செய்தும் ஆறுதல் தந்த அனைவர்க்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
மைந்தர்கள்
செல்லத்துரை நாவரசன்
செல்லத்துரை மாவிரதன்
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நாவரசன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.