

யாழ். கைதடி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியவேல் ஜெகதீஸ்வரி அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாசிலாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமு சுப்பிரமணியவேல்(ஓய்வுபெற்ற இ.போ.ச சாலை பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகலாதன்(யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி - ஆசிரியர்), அரிகரன்(களநிகழ்ச்சித் திட்ட முகாமையாளர், SLCDF, முன்னாள் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தலைவர்- 2009, 2010), திருக்குமரன்(பிரான்ஸ்), கம்சத்வனி(லண்டன்), கோவர்த்தனி(தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர் TSF) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யசிக்கா(யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியை), கலாதீபன்(லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தின நாகேஸ்வரி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, சண்முகலிங்கம்(ஓய்வு நிலை யாழ்/ போதன வைத்தியசாலைப் பணியாளர்), வரதலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராசா மற்றும் நடராசா(மலேரியா தடுப்புப்பிரிவு உத்தியோகத்தர்), சந்திரமலா(ஓய்வுநிலை தபால் உத்தியோகத்தர்), சௌந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமாதேவி(லண்டன்), வசிகாதேவி(லண்டன்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), கார்த்திகாயினி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ரகுராமன், குருபரன் மற்றும் தயாபரன்(சுவிஸ்), அகிலன்(ஜேர்மனி), அருணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு சிறியத் தாயாரும்,
சுபாங்கன்(யா/ தேசிய கல்வியியற் கல்லூரி மாணவன்), ஜெகதாரணி(நைற்றா- மாணவி), தேனுஜா(நைற்றா கைச்சேரி மாணவி), விதுசிகா(சுவிஸ்), நிலக்சியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தஸ்வின், அக்ஷனா(லண்டன்), அத்மிகன், அகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.