யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சோமசுந்தரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவில் கலந்தோடி
நிழலில் இசைந்தாடி
நெஞ்சில் உயிர் வாழும் உறவே
ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவுகள் கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்திடாதிருக்க
வேரென இருந்தவரே!
தொலைதூரம் உங்களை தொலைத்துவிட்டு
தவிக்கின்றோம் தனிமையில்!
கண்னீரில் மிதக்கின்றோம்!
கைகோர்க்க நினைக்கின்றோம்!
தோள் சாயத்துடிக்கின்றோம்! உதிர்வுகள்
உடல்களுக்கு மட்டும்தான் பதிவுகள்
பாசமனங்களின் நிரந்தர இருப்பிடம்
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு நீங்கள்
ஆண்டவன் பாதங்கள் மட்டுமல்ல
எம் இதயங்களும் என்றென்றும்
உங்கள் ஆத்மாவின் இருப்பிடம்...
உங்களை நினைவு கூர்ந்து
இந்நாளில் துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
Rest in Peace ?