திதி:25/08/2024
திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த எம் தெய்வமே...
கைப்பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மை காத்து வந்தீரே!
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
தவப்புதல்வியாம் என் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே
அன்பாக கல்வியூட்டி, வாழ வழிகாட்டி,
தக்கதுணை தேடி தரணியிலே வாழ
வைத்தவரே உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
ஐந்து என்ன ஐந்துயுகம் கழிந்தாலும்
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again.