யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஓமான், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் முத்துலிங்கம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் மழையில் எம்மை நனையவைத்து
ஆலம் விழுது போல் அனைவரையும் தாங்கி நின்று
இல்லறம் எனும் நல்லறத்தில் இன்பமுடன் வாழவைத்து
ஈகையில் கர்ணனுக்கு இணையான வழிநின்று
உறவுகளின் வளர்ச்சிக்கு உன்னதமாக வழிவகுத்து
ஊரவர்க்குத் தோள் கொடுக்கும் முத்துவாக முன்நின்று
எளிமையான வாழ்வை இன்பமுடன் அரவணைத்து
ஏற்றமுடன் நாம் வாழ பல்துறையில் சிறந்து நின்று
ஒற்றுமையே வாழ்வு என இறுதிவரை தடம் பதித்து
ஓம்கார முருகனின் திருவடி தினம் வணங்கி நின்று
ஔவியம் பேசாது அனைவரையும் வாழ வழியமைத்து
அகவை ஐம்பத்திநான்கில் அவசரமாய்
ஆண்டவன் காலடி சென்றதேனோ!
ஆண்டுகள் இருபது உருண்டோடி விட்டாலும்
ஆறவில்லை-என் துயரம் தனிமரமாய்த் தவிக்கின்றேன்.
மீளவில்லை நானிங்கு
உங்கள்
ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
என்றும் உங்கள் அன்பகலா மனைவி செல்வி
ஆண்டுகள் பல போனாலும் ஆறாத்துயர் போகவில்லை ஆண்டவன் அடியில் அமைதியாய் உறங்க அனைவரும் பிரார்த்திப்போம் ..RIP