புனிதமான புங்கையூரில் பிறந்தோம் அண்ணா கொடியில் பூத்த மலர்களாய் மகிழ்ந்து வாழ்ந்தோம் அண்ணா அன்னை மகமாரியின் அடியவர்களாய்ப் பஜனைகள் செய்தோம் , பாடி மகிழ்ந்தோம், ஆலயத்தொண்டுகள் செய்தோம் , புலம்பெயர்ந்தோம் கூடுகள் கலைந்து திசைதிசையாய்ச் சென்றோம் அண்ணா. கனடா சென்றும் இறைவன் புகழ் பாடியே வாழ்ந்தீர்கள். கரம் பிடித்த மச்சாள் கலங்கியே நிற்க கவர்ந்து சென்றானே கணப்பொழுதில் காலன் அவன் . சிரித்த முகமும் , சீரிய பண்பும் கொண்ட அண்ணனே உங்கள் திடீர் மறைவை யேற்க மனம் மறுக்கிறது. மரணமே இவ்வுலக வாழ்க்கையின் முடிவு என்ற நியதியை மாற்ற முடியாது. உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முத்துமாரியின் திருவடிக் கமலங்களை வேண்டுகின்றோம். உங்களின் பிரிவால் துயருற்றிருக்கும் மச்சாள் ,பிள்ளைகள், சகோதர ,சகோதரிகள் உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் அனுதாப அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உடன்பிறவாத் தங்கை
Very sorry to hear . our heartfelt condolences to the family. Jeevakanthan & family London