யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Cornwall, Hamilton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிந்த சுப்பிரமணியம் குணரத்தினம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சீரோடு வாழ்ந்து எம் சிந்தையிலே
நிலைத்திருந்த குணம் அண்ணாவே!
பேரோடு வாழ்ந்து பெயர் போல் குணத்தில்
ரெத்தினமாய் வந்துதித்த உத்தமரே!
எம் தாய் மாரியம்பாள் ஆலய திருப்பணிக்காய்
அன்போடு பல அறிவுரைகள் கூறி
எமை வழிநடத்தி உயர்ந்த குணம் அண்ணாவே!
உனை அழைக்க நினைத்த எம் தாய் மாரியம்மா
இம்முறை தனது மகோற்சவம் காண அழைத்து
உம் பக்தியிலே உருகி உனை அழைத்துக் கொண்டாளோ!
உங்களைக் கண்டதும் கதைகள் பல பேசியதும்
என் கண்களிலே கனவு போல் ஆனதண்ணா!
நீங்கள் இறந்த செய்தி அறிந்த அன்றிரவு
நித்திரையே இல்லை அண்ணா!
உங்களுடன் பழகிய நினைவுகள் என் சிந்தையில்
தினம் தினம் ஓடுது அண்ணா!
உங்கள் ஆத்மா அன்னை மகமாரி பாதமதில் நித்திய சாந்தி பெற
எம் தாய் மாரியம்பாளை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:
இல. 44A,
ஸ்ரீ கதிரேசன் வீதி,
கொழும்பு-13.
Very sorry to hear . our heartfelt condolences to the family. Jeevakanthan & family London