யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குணரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எண்ணிய முடித்து நல்லவே எண்ணி
திண்ணிய நெஞ்சோடும் தெளிந்த
நல் அறிவோடும் அன்புக்கு அடிமை
யாகி அறிவுக்கு செவிசாய்த்து
பண்புக்கு உயிர் வாழ்ந்து
பரிவுக்கு பணிந்து வாழ்ந்து
மாரியம்மன் திருப்பாதங்களில்
சரண் புகுந்தீர்களே!
ஆணி வேராய் வாழ்ந்த தெய்வமே
விழுதுகள் இங்கிருந்து விம்முகின்றோம்.
நாட்கள் தான் 31 ஆகியது ஆனாலும்
ஆறவில்லை எம்மனம் ஆண்டுகள் கழியலாம்
ஈர் ஏழு ஜென்மம் எடுத்தாலும்
நினைவுகள் அழியாது.
சிந்தனை செய்து செயல் திறன் கண்டு
மண்ணுளோர் மனதில் மதிப்பிடங் கொண்டு
கண்ணிலே சிரிப்பு வார்த்தையில் தொனிப்பு
கவிதையில் முனைப்பு மதியிலே நுட்பம்
தேவாரப் பிந்தன் நாட்டுப் பற்றாளன்
பற்றியகரம் தளர்ந்ததேன் பாசக்கயிறு
அறுந்ததேன்! சூரியக்கதிர் அணைந்ததேன்
எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய் திகழ்ந்து எமக் கெல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்த எமது குடும்பத்தலைவரின் மறைவின் போது நேரில் வந்தும், தொலைபேசி, தொலை நகல் மூலம் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம் வைத்து அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அந்தியேட்டிக் கிரிகை ஆத்ம சாந்திப் பூசைகளிலும் கலந்து கொண்டவர்களுக்கும், மரண சடங்கு நிகழ்த்த மண்டபம் தந்தவர்களுக்கும், நினைவு மலரை அச்சிட்டு உதவிய அச்சகத்தாருக்கும், கிரிகைகள் நடத்திய குருமார்களுக்கும், மரண அறிவித்தல், நன்றிகள் தெரிவிக்க உதவிய லங்கா ஸ்ரீ நிறுவனத்துக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
Heartfelt condolences to the family.