சித்தப்பா (மாமா) நீங்கள் எங்களோடு நிஜத்தில் இல்லை என்பதை எங்களால் நம்பமுடிவில்லை நீங்கள் காட்டிய அன்பும் அரவனைப்புக்கும் எங்களால் உங்களின் இறுதிப்பயணத்தில் வந்து உங்களை வழியணுப்பக்கூட ஆண்டவன் ஏனோ எங்களைத்தடுத்துவிட்டான்.என்றாலும் நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள் சோதனகள் வரும்போதெல்லாம் ஓடிவந்து உதவிகள்புரிந்தும் சோர்ந்து விடாதீர்கள் மருமகன் என்று ஆறுதல் கூறிய வார்த்தைகள் இன்றும் எமது காதினில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது! பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!நேசத்துடன் எங்களை அரவனைத்து நேர்மையுடன் எமக்கு வழிகாட்டி வாழ்ந்தீர்கள் மாமா! உங்கள் உடலில் நோயிருந்தும் பொருட்படுத்தாது எம்மைக்கவனமாய் இருங்கள் எனக் கூறிய நீங்கள் இப்போ எங்கே சென்றீர்கள்??போகும் நேரத்தை முன்னே தெரிந்துதான் எல்லோரையும் தேடினீர்களோ!இப்போ உங்களை நினைத்து நினைத்து இந்த உலகத்தில் உங்களை உயிராய்த்தேடுகிறோம்! எங்கள் இதயவலிக்கிறது .நீங்கள்சென்றபயணம் நல்லபடியாக அமைய நாமும் இறைவனைப்பிராத்திகிறோம்,