Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 MAY 1939
இறப்பு 30 OCT 2020
அமரர் சுப்பிரமணியம் ஜானகி 1939 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் ஜானகி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?

ஆண்டுகள் பல ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை

ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!

ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போல் அன்பு
கொள்ள யாருமில்லை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!!!

தகவல்: குடும்பத்தினர்