யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பென்ற கூட்டுக்குள் அடைகாத்தீர்
அறிவுப் பசிதீர்த்து அகிலத்தில் உயரவைத்தீர்
அனாதையாய் எமை விட்டு எங்கு சென்றீர்
ஆறாது மனம் வாடுகின்றோம் வேதனையால்
ஆறாக கரைகின்றோம் தினம் கண்ணீரால்
ஆழ்கடலில் தனியாக எமை விட்டு எங்கு சென்றீர்
இல்லையென்று சொல்ல மனம் மறுக்கிறதே
இருந்த இடம்தெடி ஓடத்தினம் துடிக்கிறதே
இருட்டினிலே எமை விடுத்து எங்குசெண்றீனர்
ஈருடல் ஓருயிராய் இணைத்திருந்தீர்
ஈர்மூன்று செல்வங்களால் நிறைந்திருந்தீர்
இணையாகி வந்தோரை மதித்திருந்தீர்
ஈன்றெடுத்த குழந்தைகளை அணைத்திருந்தீர்
ஈசனடிதேடி இணைந்திட நீர் செண்றீரோ
பாசமுடன் உறவுகளை அரவனைத்தீர்
பண்பென்ற சொல்லுக்கு இலக்கணமானீர்
பகலவனாய் எல்லோர்க்கும் ஒளிதந்தீர்
பரமனடி சென்றடைய பயணமானீரோ
நித்திய அமைதிக்காய் நெடுந்தூரம் செல்கின்றீர்
நித்தம் மலர்தூவி வணங்குகின்றோம் நாமின்று
நிமலடி சேர்ந்து பெருவாழ்வில் இணைந்துவிடும்
ஆத்மா அமைதியாய் நித்தம் நாம் வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!!
எங்கள் இல்லத்து இதய தெய்வம்
அமரர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து எமது இல்லத்திற்கு நேரில் வந்தும் உலகின் பல பாகங்களில் இருந்து தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல், முகநூல் வழியாகவும் அழைத்து அனுதாபங்களை தெரிவித்தோருக்கும், பார்வைக்கு வைக்கப்பட்ட போது மண்டபத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர் வளையங்கள் சமர்ப்பித்தோருக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டோருக்கும், இறுதிக் கிரியையில் எண்ணற்ற அளவில் கலந்து கொண்டோருக்கும், மனமுடைந்திருந்த வேளைகளில் உணவளித்த அன்புள்ளங்களுக்கும், வைத்தியசாலையில் வைத்தியசேவை புரிந்த அனைத்து வைத்தியர்களுக்கும், தாதிமார்களுக்கும் மற்றும் அனைவருக்கும், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும், இறுதிக் கிரியைகளுக்கான ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொடுத்த Chapel Ridge Funeral Home & Cremation Centre க்கும்
ஆத்ம சாந்தி கிரியைகளை முறையாக நிறைவேற்றித் தந்த சைவமத குருமாருக்கும், மற்றும் பல வழிகளில் உதவியோருக்கும் எமது
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி ஆத்ம சாந்தி பிரார்த்தனை 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 635 Middlefield Road, Scarborough ON M1V 5B8 இல் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்வில் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.