

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ், கொழும்பு கதிரேசன் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் 11 ஆண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!
அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து!
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
அர்ப்பணிக்கின்றோம்!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் நினைவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.