யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு கதிரேசன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-02-2024
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
அப்பா! உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!