யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழத்தொடங்கி வாசலுக்குவருமுன்
பறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
சொரியும் நீர் துடைக்க வந்திடுவாய்
நிழல் நீ தான் என்று இருந்தோமே..
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து நித்தம் புலம்புகின்றோம் !
விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால் உன் நினைவு இல்லாத நொடிகள் இல்லை...!
என்றும் உம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
Deepest sympathy