யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பார்த்தீபனே எங்கள் இனிய செல்வமே!
நம் வம்சத்து வாரிசாய் வந்த குலவிளக்கே
அன்பு, பண்பு, அறிவு, அழகு, கல்வித்திறனோடு
மட்டும் இல்லாமல் இசைத்துறையில் ரொரண்ரோவில்
D.J என்றால் BROWN SOUL தான் என்ற ஒரு பெயரோடு
கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த வேளையில்
உன்னை பொல்லாத விதிவந்து பிறிம்லி கடற்கரைக்கு
படகில் கூட்டிச் சென்று உன்னைக் கடலில் காவு கொண்டு விட்டதடா பார்த்தீபா
அன்றாடம் உன்னை அரவணைத்த அம்மா,
பத்து வயதின் பின் உன்னை நேரில் பார்க்காத அப்பா,
ஓடி ஆடி உன்னோடு விளையாடிய அக்கா, தம்பி
நீ தான் தனது வலது கை என நம்பி இருந்த சித்தப்பா
நீ விடை பெற்றும் விடை தேடித் துடிக்கின்றனர்.
விடிந்திட்ட நாள் மலர்கள் அந்தியிலே வாடினாலும்
மாதங்கள் வந்தது போல் ஓடித்தான் போய் விடினும்
ஆண்டொன்று அதற்குள்ளே ஆகிவிட்ட போதினிலும்
உன் நினைவு எம்மனதில் என்றென்றும் பசுமையடா
மறப்போமா உன்னை மறவோமே எம் பார்த்தீபனை!
உன் பிரிவினால் வாடும் குடும்பத்தினர்,
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்...
Deepest sympathy