
-
18 JUL 1930 - 22 JUN 2009 (78 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சுவிஸ், Switzerland நோர்வே, Norway கொழும்பு, Sri Lanka
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், நோர்வே, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அப்பா உங்களைப் போன்று
காத்திட யாரும் இல்லை இவ் உலகில்...
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
பல்லாண்டு சென்றிடினும்
ஆறவில்லை எம் துயர்
என்றும் உங்கள் நினைவுடன்
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காக நம் குடும்பத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து அனைவரது வாழ்வினையும் பிரகாசிக்கச் செய்த அமரர் சுப்பிரமணியம் நாகராஜா அவர்களது ஆத்ம சாந்திக்காக 01-07-2019 திங்கட்கிழமை அன்று கைதடி வீரகத்திப் பிள்ளையார் சிவன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தெல்லிப்பளை மகளிர் இல்லம், கோண்டாவில் சிவபூமி சிறுவர் இல்லம், கிளிநொச்சி சிவபூமி சிறுவர் இல்லம், சிவபூமி முதியோர் இல்லம் ஆகிய பாரமரிப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவு உபசாரமும், 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்திலும், 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை அன்னதான மடத்திலும் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Even though it has been 10 years, it is impossible to forget your presence and impact on my life. Whenever I face any problems or worries, I immediately think of you and everything seems to be...