அமரர் மார்க்கண்டு சுப்பிரமணியம். அன்பின் திருஉருவாய், அடக்கத்தின் பெட்டகமாய், பண்பின் சிகரமாய் திகழ்ந்த மார்க்கண்டு அங்கிளிற்கு , எமது குடும்பத்தினரின் நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். எமது உறவினரும், எனது அப்பாவின் அபிமானத்திற்குரிய மாணவர்களில் ஒருவரும், உடன் பிறவாச்சகோதரனுமாகிய அங்கிள் அவர்கள் எனது அப்பாவின்மேல் ஆழமான அன்பும், அளவிட முடியாத குருபக்தியுமுடையவர் இதனை பல சந்தர்ப்பங்களில் நான் நன்கு உணர்ந்தேன். அவர் இன்று அமரர் ஆகிவிட்டார் என்ற செய்தியறிந்து மனம் மிக வருந்துகின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைந்து இறைவன் அடியில் இன்புற்றிருக்கவும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! அமரர் பண்டிதர் கந்தையா குடும்பத்தினரின் சார்பாக சந்திரா மயூரவரதன்
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்.🙏🙏அன்னாரின் பிரிவால் துயரக்கடலில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்😭🥀🌸🌸