
திதி:29/04/2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம், பாண்டியன்குளம், அனலைதீவு, ஜேர்மனி Neuss, நோர்வே Oslo, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்ரமணியம் மகாதேவா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
ஆண்டுகள் இரண்டு கடந்தாலும்
எம் தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் அப்பா..!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்..!
We are miss you sithappa.Rest of peace