கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், இல. 30 உதயநகர் மேற்கை வதிவிடமாகவும், இல. 220 வினாயகபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லங்கேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
எம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழத்திவிட்டு இறைபதம் எய்திய எம் அன்புத் தெய்வம் திரு. சுப்பிரமணியம் லங்கேஸ்வரன் அவர்கள் நோயின் பிடியில் சிக்கி மரணமுற்ற பொழுது மரணச் சடங்குக்குரிய ஏற்பாடுகளை செய்த அயலவர்கள் உறவினர்களுக்கும்,உடல்நலமற்று வைத்திய தேவைகளை மேற்கொள்வதற்காக வைத்திய நிபுனர்களை தொடர்பெடுத்தல் மற்றும் வைத்தியசாலையில் தங்கியிரந்தவேளை இரவுபகல் பாராது அவருக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்த எம் உறவான திருமதி நிர்மலாதேவி கமலநாதன் (மருத்துவத்தாதி கிளிநொச்சி வைத்தியசாலை) திரு.கணேசமூர்த்தி (கணேஸ்- மைத்துனர்) ஆசிரியர், கிளிநொச்சி. விநாயகமூர்த்தி (விநாயகன் மைத்துனர்) மற்றும் இறுதிக்கிரியைகள், வீட்டுச்சடங்குகள் அகியன நேர்த்தியாகச் செய்ய உதவிய திரு.தவராசா (தவம்) திரு.கயன், இறுதிக்கிரியைகள் செய்த மைத்துனர் வசந்தகுமார் (வசந்தன்) ஆகியோருக்கும் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம். உலகின் பல பாகங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாகவும் ஏனைய வழிகளிலும் எமது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங் களைத் தெரிவித்தோருக்கும் மற்றும் அந்தியேட்டி கிரியையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் எம்முடன் கலந்து உதவிகள் புரிந்த உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மலர் வளையங்கள், கண்ணீர் அஞ்சலிகள் மூலம் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதிநாள் இரங்கல் உரை நிகழ்த்தியோருக்கும் அபரக் கிரியை செய்த சிவாச்சாரியார், அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியைகளை செய்த சிவாச்சாரியர்களுக்கும் இம்மலர் உரு வாக்கத்தில் அமரர் அவர்களின் பண்புகளையும் பணிகளையும் நிரல்படுத்தி பதிவுகளை தந்த பெரியோருக்கும் அன்பு கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 05-12-2024 வியாழக்கிழமை அன்று கீரிமலை தீர்த்தக்கரையில் மு.ப 07:00 மணியளவில் இடம்பெற்று வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 07-12-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் பங்கேற்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
220, விநாயகபுரம்,
கிளிநொச்சி.