Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 OCT 1942
மறைவு 03 SEP 2023
அமரர் சுப்பிரமணியம் அருணாசலம் 1942 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நெல்லியடி, கிளிநொச்சி உடையார்கட்டு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அருணாசலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இரண்டு ஆண்டுகள்
பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா
நித்தமும் மனவேதனையுடன் மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...

உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோகரன்(மனோ) - மகன்