

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Glasgow Scotland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-03-2025
அன்புள்ள அப்பா...
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும்
நீங்கள் தான் அப்பா...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே
உங்கள் முகம்
எந்நாளும் உயிர்
வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா
என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா...
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
அன்னாரின் திதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது Scotland இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இதனை வீட்டு அழைப்பாக ஏற்று அங்கு நடைபெறும் மதியபோசனத்திலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Rip