

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடல் சக்களாவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரை சுப்பிரமணியம் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புளியங்கூடலைச் சேர்ந்த கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசகுமாரி மற்றும் பாலேந்திரன், மகாலிங்கம்(மகேந்திரன்- கனடா), வசந்தகுமாரி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கண்மணி, செல்லையா, சுப்பையா, கனகரட்ணம், நாகம்மா, பார்வதி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கந்தசாமி, பொன்னம்மா, வேலாயுதம், அன்னம்மா, இராசமணி, முருகேசு, அன்னம்மா, கனகேஸ்வரி, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவராசா, ஜெகதீஸ்வரி, தேவமனோகரி(ரோகினி- கனடா), சத்திதரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதா, லலிதா, சுதாகரன், காலஞ்சென்ற வசீகரன், பாஸ்கரன், சுபாஜினி, அனுராஜ்(கொழும்பு), துஸ்யந்தன்(கனடா), யோநதன்(கனடா), அருள்ராஜ்(சுவிஸ்), அருள் அமலா(இந்தியா), கீர்த்தனா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவிராஜன், தனுசிகா, மயூரிகா, திபானி, நிரூபன், சாவித்திரி, ஓவியா, ஆருஷன், யதுசிகா, இனியா, யதீசன், குபேரா(கனடா), நிசோபிகா, கபிநயன், சஸ்ரிக், தேஸ்மிதா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குஞ்சி சுபத்திரை குலம் விளங்க வந்த குலவிளக்கு கொஞ்சி விளையாட கொள்ளு பேரர் வரை கண்ட விருட்சம் பஞ்சி பாரமல் பகல் இரவாய் உழைத்து ஊட்டி வளர்த்த உத்தமி அஞ்சி நடுங்கி அல்லல் பட்ட வேளையிலும் கஞ்சி...