2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் கேந்திரநாதன்
வயது 72
அமரர் சுப்பிரமணியம் கேந்திரநாதன்
1950 -
2022
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல் இலுப்பைக் கடவை மற்றும் மன்னார் உப்புக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கேந்திரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Sorry to hear of your loss, our sincere condolences to your family