
-
18 NOV 1970 - 31 MAY 2021 (50 வயது)
-
பிறந்த இடம் : தாளையடி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Frankfurt Am Main, Germany
கண்ணீர் அஞ்சலி
நேற்றுப்போல் உள்ளது - யோனாஸ் அண்ணா நெஞ்சம் கணத்து கலங்கி நிற்கிறது உங்கள் நினைவுகள்... உள்ளன்போடு அன்புடன் உம்மில் பிரியமானவர் திரளென எம்மையெல்லாம் உம்மோடு இணைந்த இறையன்போடு இணைத்துவிட்டு நீரோ எம்மை விட்டு இவ்வுலகை விடைபெற்றீரே.. இவ்வுலகில் உம்பணி நிறையவே பிராங்பேர்ட் கத்தோலிக்க ஆன்மிக பணியகத்தின் செயற்பாட்டில் உம் செயற்திறன் என்மனதில் பதியம் எல்லோரையும் முன்னிறுத்தி குறிப்பாக இளையோரை இறைபணியில் இணைத்து நிற்ப்பீரே - யோனாஸ் அண்ணா இனிவரும் பிராங்பேர்ட் ஒளிவிழாக்கள் நீங்கள் இன்றி எண்ணிப் பார்க்கையில் கணக்கின்றது எதைக் கணத்த மனதுடன் நான் சொல்ல கடந்து வந்த ஒளி விழாக்கள் சிறப்பில் உம் பணி யார் தொடர்வார்?....அவ்விடம் வெற்றிடமே! ஏனெனில் நிகழ்வுகள் சிறக்க அனைவரையும் முன்னிறுத்தி - நீரோ பின்னின்று சுமையான பணி அனைத்துமதை செவ்வெனே செய்து விட்டுப் பெருமை கொள்ளா இறைமகன் பிள்ளை நீர் - அனைவருக்குமாய் நிகழ்வுகள் எங்கும் உம் சிரித்த முகம் நிலைத்திருக்கும்- அது நீர் பெற்ற யோகம் யோனாஸ் அண்ணா உங்களோடு நாம் இணைந்த தருணங்களை மீட்டுகையில் எம்மோடு உம் நினைவுகள் என்றும் வாழும் நாடகங்களால் இணைந்த நினைவுகள் அரங்கம் கண்ட எங்கள் நாடகங்கள் யோனாஸ் அண்ணா உங்கள் நினைவுகள் அழியாப் பதிவுகளாகும் உம்மிடம் மிகு நடிப்புத் திறன் இருந்தும் ஒத்திகைக்கு எத்தனைமுறை எப்போது அழைத்தாலும் நேரம் பிந்தாது வருகை தருவீரே நகைச்சுவைக்கு யோனாஸ் அண்ணா என “உமக்கான பாத்திரத்தில் எழுதப்படும் நகைச்சுவை காணாது (போதாது) போலிருக்கும் ! அரங்கத்தில் ஆற்றுகை செய்யும் வரை நீரோ மேடை ஏறி கதாபாத்திரத்தில் மூழ்கியே உம் திறன்மிகு நகைச்சுவையால் சிரிப்போலி அடங்கா பார்வையாளரை நிறைத்த அரங்கங்கள் அனைவருக்கும் நினைவிருக்கச் செய்துள்ளீர் நாம் இணைந்த நாடகத்தால் பல விருது பெற்றாலும் சிறந்த நடிகனுக்கான விருதை நீர் பெற்றது என்றும் எம் மனதில் நீங்கா நினைவலைகள் -அது உம்மோடு இணைந்த சிரித்த முகம் மலர் மலர்ந்த உம் திருமுகம் அனைவருக்கும் நினைவிருக்கச் செய்துவீட்டீர் எம்முகம் வாடவிட்டு நீரோ எம்மை விட்டு விடை பெற்றுவீட்டீரே உம் நினைவுகள் என்றும் எம்மோடு வாழும் உங்கள் ஆத்மா இறையோடு இணையட்டும் யோனாஸ் அண்ணாவின் பிரிவில் துயரால் வாடும் அவர் தம் குடும்பத்தினருடன் நாங்களும் இணைகின்றோம் கோபி-பிறேமிலி
Summary
-
தாளையடி, Sri Lanka பிறந்த இடம்
-
Frankfurt Am Main, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion