யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வேலணையை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஶ்ரீஸ்கந்தராஜா மங்களேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-06-2024
ஆண்டொன்று ஆனபோதும்
ஆறவில்லை காயம்
தலைதடவும் தாயாய்
தாங்கி நிற்கும் தந்தையாய்
உணர்வு பொங்கும் சகோதரியாய்
ஆலோசனை நல்கும்
நல் மந்திரியாய்
எம்மை எல்லாம் காத்து நின்று
இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட
உம்மை இமைப்பொழுதும்
மறவாது நீள நினைத்திருக்கிறோம்
நித்தலும் உம் நல்வாழ்வுக்காய்க்
கை தொழுகின்றோம்.
நேச நெய் தனியெடுத்து அதில்
பாச மா கலந்து வைத்து
பக்குவமாய்ப்பார்த்த உம்மை
பரிவுடனே தொழுது நின்றோம்...
உங்கள் ஆன்மா எல்லாம் வல்ல
இறைப்பரம் பொருளின் இணையடி
மலரில் இணையிலா
இன்பம் பெறுவதாகட்டும்....
இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உங்கள் உறவு தொடர
இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...
RIP AMMA!!! Going to miss you 😢