8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிறிகாந்தன் நகுலேஸ்வரி
உதிர்வு
- 22 DEC 2017
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறிகாந்தன் நகுலேஸ்வரி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டுகள் எட்டு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து பார்த்துப் பார்த்து
வளர்த்தது பசுமையான நினைவுகளாய்
இருக்கிறதே உங்கள் அன்பின்
ஆழம்தான் இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது!
அகவை எட்டு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம்
அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
நீங்கள் எங்களை ஒருபோதும் விட்டு
விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்