யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறிகாந்தன் நகுலேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஐந்தாண்டுகள் உருண்டோடி விட்டது
ஆனாலும் உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுது
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது
என்று
யாருக்கு தெரியும்
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன்
என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
பொய்யான தகவலாய் இருக்க கூடாதா
என்று
எம் மனம் ஏங்கியதுண்டு
உங்கள் பிரிவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
நீங்கள் என்றென்றும் எங்கள்
இதயமதில்
இணைபிரியா வாழ்வீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...