யாழ். உடுவில் கிழக்கு கற்பகபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீகாந்தன் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கனகம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
வேலாயுதபிள்ளை இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சன், துஜீவன், துவாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினிதேவி, சந்திரகாந்தன்(சுவிஸ்), சகுந்தலாதேவி, செல்லகுமார், காலஞ்சென்ற ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஞானேஸ்வரி, நிர்மலாதேவி(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2020 வியாழக்கிழமை அன்று மு. ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.