Clicky

பிறப்பு 08 APR 1961
இறப்பு 25 DEC 2019
அமரர் ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம்
பிரதம நூலகர்- யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர்- இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் நூலக ஒன்றியம், இலங்கை நூலகச் சங்கம்
வயது 58
அமரர் ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம் 1961 - 2019 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யசோதா.பத்மநாதன் 26 DEC 2019 Australia

எதிர்பாராத இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சமூகத்தில் கல்வியாளராகவும் துணிச்சலான பெண்ணாகவும் தமிழ் மரபுகள் மீது அதீத ஈடுபாடு கொண்டவராகவும் எதிர்கால தமிழ் மாணாக்கர்களின் மீது மிகுந்த வாஞ்சையும் அக்கறையும் கொண்டவராகவும் அவர் விளங்கினார். நூலகங்களை நோக்கி மாணவர்கள் வருவதற்குப் பதிலாக நூலகங்கள் மாணவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்பதில் முனைப்போடு செயற்பட்டது மாத்திரமில்லாமல் கண்காட்சிகள் மூலமாக அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். ஒரு தமிழ் பெண்ணாக - தனி ஒருவராக - தன் சம்பாத்தியம் அனைத்தையும்; தன் வாழ்நாள் காலம் முழுவதையும் செலவளித்து மறைந்த மரபுகளைப் பேண அவர் எடுத்த முயற்சியும் கனவுகளும் பாதியிலே நிற்கிறது. அதனை மேற்கொண்டு வளர்த்துச் செல்வதிலும் அதனை நிலையாக ஓரிடத்தில் அவர் சேர்த்த பொருட்களைப் பேணி அதை எதிர்காலச் சந்ததிக்குக் கையளிப்பதன் மூலமே அவர் ஆத்மா ஷாந்தி கொள்ளும். அவருடய இழப்பால் துயர் கொள்லும் குடும்பத்தாரின் துயரில் நானும் பங்கு கொள்ளுகிறேன்.