யாழ். வேலணை துறையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் ஸ்ரீகந்தராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
வசந்தகாலம் என்றால் அது
உங்களுடன் வாழ்ந்த காலம் தானே!
வாழ்க்கை என்பது இறைவன்
அவன் வகுத்தவரை தானே!
இன்றோடு நான்காண்டு கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு, பரிவு, பாசம் மாறாதே!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்,
மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்..!
Akka I am Croos. Accept Our heart felt condolances. Sorry for belated sharing of the message. May his soul rest in etrnal peace in the hands of the risen lord. Sebastian Croos family From Sri Lanka.