யாழ். வேலணை துறையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் ஸ்ரீகந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்கு
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை மறந்து
துயில் கொள்ள போனதெங்கே!
உங்களை தேடி எங்கள் கண்கள் களைத்ததையா!
நிழல் போல் இருந்தவரே நினைவாய் மாறி விட்டீர்!
கண்ணிமைக்கும் நேரத்திலே கண்ணீர் துளியானவரே!
பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
Akka I am Croos. Accept Our heart felt condolances. Sorry for belated sharing of the message. May his soul rest in etrnal peace in the hands of the risen lord. Sebastian Croos family From Sri Lanka.