
முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lampertheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறீதர் ஜெனீற்ரா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அன்னையாய்
அறிவான துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே !!!!
முத்தான உம் புன்சிரிப்பை
எப்படித்தான் மறப்போம்
பிள்ளைகளோடு என்னையும் தனியாக
தவிக்கவிட்டு பதில் ஏதும் சொல்லாமல்
பயணம் தான் சென்றனையோ !!!!
மாண்டு போக முடியாமல்
மெளனமாக அழுகின்றோம்
தீண்டும் இன்பம் தரமாட்டாயோ- என
தினம் தினம் தவித்தபடி.....
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவு திருப்பலி
03-04-2025 அன்று மு.ப 06.00 மணியளவில்
St/Anna's church, சிலாவத்தை, முல்லைத்தீவு. எனும் முகவரியில் நடைபெறும்.
We offer our sincere condolences for your loss. Your loved one was a remarkable person whose memories will be cherished forever.