முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lampertheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறீதர் ஜெனீற்ரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
நீ எனைவிட்டுப்போய்
ஆண்டு ஒன்றானாலும்
உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே..
உன் அன்பை நினைக்கையிலே
உணவும் சேறானது
எதை நினைத்து வாழ்ந்திட நான்
வருவாயா தினமும் நீ
அம்மா.......!!!!!
அன்பான அம்மா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!
அன்னாரின் நினைவஞ்சலி திருப்பலியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Apr 2024 3:00 PM
We offer our sincere condolences for your loss. Your loved one was a remarkable person whose memories will be cherished forever.