யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சௌந்தேஸ்வரி இராஜகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19/04/2023.
எங்கள் உயிருக்குள் உயிரான தெய்வமே!
எங்கள் உலகமே நீ தானென என்றிருந்தோம்
ஏன் இப்படி நடந்தது?
எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
நேற்று போல் இருக்கிறது உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தாய் அம்மா!
எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நாங்கள் தவிக்கின்றோம்...
எங்கள் ஆருயிர் அம்மாவே!
எங்களிடம் திரும்பவும் நீ வந்துவிடு!
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்
வருவதில்லை மானிடர் இயல்பு இதுதான் என்று
மறக்கவும் முடியவில்லை அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.