Clicky

மண்ணில் 25 MAR 1943
விண்ணில் 08 JUL 2021
அமரர் சோதிவேற்பிள்ளை அருந்ததி 1943 - 2021 யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

MATHI SOTHIVETPILLAI 09 JUL 2021 Australia

இந்த பிறப்பில் எனக்கு கிடைத்த ஒரே ஒரு வரம் ஓய்ந்து விட்டது. அம்மா இந்த நரக உலகத்தை விட்டு நித்திய அமைதியை நாடி விட்டீங்களோ? பாசத்தின் உறைவிடமே அம்மா நீயில்லாத இந்த உலகத்தில் நான் இனிதனி மரமாகி விட்டேன். இயற்கை, சமூகம், அதிகார வர்க்கங்கள் என யாவுமே எதிராக இருந்த போதும் கடந்த இருபது ஆண்டுகளாய் உங்களுக்காய் வாழ்ந்திருக்கிறேன். இன்று உங்களுக்காக அமைதியாகும் இன்றைய நாட்களிலிருந்து என் உயிர் உங்கள் ஆன்மாவோடு கலக்கும் நாள் வரை சத்தியத்தின் மகனாக கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று என் பிறவிக்கடனை தீர்ப்பேன். இதுவே நான் உங்களுக்கு சொல்லி அனுப்பும் கடைசி சத்திய வார்த்தையுமாகும்.