யாழ். வேலணை மேற்கு சென்ர கொலிச் அருகாமையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அன்புள்ள அம்மம்மாவுக்கு சமர்பணம்
அம்மம்மா உங்கள் மகத்துவத்தை வர்ணிக்க எனக்கு
வார்த்தை இல்லை அன்பிற்கும் பாசத்திற்கு உரிய
அடையாளம் என்றால் அது என் அம்மம்மா தான்!
அம்மம்மா உங்கள் நினைவுகள் எம் மனதில் நிறைந்து நிற்கின்றது
ஆண்டு ஒன்று போனாலும் உங்கள் பிரிவு
என்னை வாட்டிக் கொண்டே இருக்கிறது....
என் அறிவு தெரிந்த நாள் முதலாக என்னை அரவணைத்து
பாசத்தோடு ஊட்டி வளர்க்கும் போது நல்ல பழக்கவழக்கதை
சொல்லித்தந்தீர்கள் இவை மட்டுமல்ல என் நலன் கருதி
எனக்காக தினமும் பிராத்தனை செய்தீர்கள் அம்மம்மா..
உங்கள் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது
என்றும் உங்கள் அறிவுரையை நான் தொடர்வேன்.....
உங்கள் நல் அருளால் என்றும் எனக்கு ஒளியாக
நின்று என் பாதைக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பீர்கள்
எத்தனை காலங்கள் சென்றாலும் உங்கள் நினைவுகளை நான்
மறேவன் என்றும் என் உள்ளத்தில் இருப்பீர்கள் அம்மம்மா..
ஒம் நமசிவாய! ஒம் நமசிவாய! ஒம் நமசிவாய
உங்கள் அன்பு பேரன்
நிலோஜன் மகேந்திரலிங்கம்