Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1941
இறப்பு 22 AUG 2020
அமரர் சூசைப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை (உஷா)
முன்னைநாள் உஷா விற்பனை முகவர்- பிரதான வீதி, கிராம சபை முன்னாள் உப தவிசாளர்- அல்லைப்பிட்டி, முன்னாள் இணக்க சபை தலைவர், ஸ்தாபகர்- “அறிவகம்” சனசமூக நிலையம் , ஸ்தாபகர்- தூய அந்தோனியார் ஆலயம் - அல்லைப்பிட்டி
வயது 78
அமரர் சூசைப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை 1941 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லையூரைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் கோவில் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  பேதுருப்பிள்ளை மேரிப்பிள்ளை(நல்லாயன் வெதுப்பகம் நானாட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற மேரி பிலோமினா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும், 

செறின் மேரி சியாமளா(ஆசிரியை), அன்ரோனைனஸ்(பல்பொருள் வணிபம்- பிரதான வீதி, மடத்தடி, யாழ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ்குமார்(பிரான்ஸ்), ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

பிரான்சிஸ்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை(விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- பாண்டியன்குளம்), ரோசம்மா மற்றும் அக்னேசம்மா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

நவரத்தினராசா, மாலினி, கலா, காலஞ்சென்ற பரமானந்தராசா மற்றும் இக்னேஷியஸ் தனம்(சிங்கர் சீர்மை உரிமையாளர், கிளிநொச்சி மாவட்ட வணிக கைத்தொழில் வேளாண் ஒன்றிய தலைவர்), திபோர்சியஸ் தனேசன்(நெதர்லாந்து, முன்னாள் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- பாண்டியன்குளம்), அலெக்சிஸ் தரளம்(நெதர்லாந்து) ஆகியோரின் சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மேரிமாகிறேற்(தங்கப்பொன்), மத்தியாஸ், சிங்கராசா, சூசைப்பிள்ளை மற்றும் பெண்டேற் சித்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

காலஞ்சென்ற மாலா மற்றும் பவா(ஜேர்மனி), இராஜேஸ்வரன்(நோர்வே) வதனி(லண்டன்), உஷா(லண்டன்), தயா(கனடா), அன்ரன் மெலஸ்(லண்டன்), றொசான்(பிரான்ஸ்), றொசாந்தி(சுவிஸ்), றொகான் (பிரான்ஸ்), றொகாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள் தெய்வீகன், ஆன் விவிலியா(ஏஞ்சல் சர்வதேச பாடசாலை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

அன்னாரின் திருவுடல்  24-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அல்லைப்பிட்டி உத்தரியமாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து  அல்லைப் பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்