
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை எட்வின் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம் சூசைப்பிள்ளை, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மனுவேல் யோண்பிள்ளை, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரீனா அவர்களின் அன்புக் கணவரும்,
சவுரியம்மா, சின்னப்பிள்ளை, காலஞ்சென்ற ராசு, வேவி, வண்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஏசு, மரியதாஸ், புவனேஸ், சிந்தாத்துரை மற்றும் சத்தியன், மனோகரன், மோகன், ரவி, றூபி, வவா, சறோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற றலீஸ், வேக்மன்(சின்னத்தம்பி), றோயஸ், குமுதினி, லக்ஸ்மன் ஆகியோரின் அன்புப் சித்தப்பாவும்,
கலா, சாந்தி, பாபு, யான்சி, கொஞ்சி, வெனற், றாஜன், றமேஸ், பின்ரன், நியூட்டன், உதயன், விஜி, யூட்ஸ், வனிதா, றெஜிமன், அவ்றா, சிவ்லியா(சிறிமலா), சோபியா(வெள்ளையம்மா), பிறின்சி, றொக்சி, சர்மலா, றேகன், பிரதாப், றாதிகா, சுரேன், நிசாந்தன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குமார், ஜெயசீலன், கலா, காலஞ்சென்ற றாயூ, றேவதி, குயின், கீதா, நந்தினி, சுலோஜினி, டெய்சிறாணி, ஜீவிதா, மதி, சர்மலா, நிக்சன், றெஜினா, ஜெனிபர், மக்லீன், றிண்டிஸ், றொபட்சன், அருண், கரோலின், தமறா, நிறோசன், சோபா, றாஜ்குமார், சர்மினி, லதா, றீனா, ஜென்சன், வினோயா, றோய், காலஞ்சென்ற வைற்றர், றிச்மன், கிளியப்பெற்றா, றாஜேஸ், புவனேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியிலிருந்து பி.ப 05:30 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Until we meet again godfather ? Today we're saying goodbye to one of the most special people that have walked this earth. Selfless, so caring, loving and always hard working - oh man you worked so...