திதி:11/12/2025
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவராஜசிங்கம் அமரர் சோமசுந்தரம் சிவராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா
அன்புக்கு உருவம் நீங்களப்பா!
தினமும் என் எண்ணத்தில் நீங்கள்
அமைதியாக
என்னுடன் என் கார் பயணத்தில்,
அருகில் அமர்ந்து.
தாத்தா, நீங்கள் தினமும் ஒரு
நட்சத்திரமாய்
வானில் நின்று
எம்மை காப்பீர்!
சிட்டு குருவியாய், வண்ணத்து பூச்சியாய்,
தும்பியாய்,
எம்மை காண வாரீர்!!
தாத்தா, உங்களை நினைக்காத நாள் இல்லை!
அமைதியான ஒரு கண்ணீர் தினமும் உமக்கு ஒரு காணிக்கை,
சில நாளில் அது ஒரு அழுகுரல்,
கவலை வேண்டாம்,
அது உங்கள் அன்புக்கான எங்கள் காணிக்கை!!
அப்பா, உங்கள் ஆறுதலும்,
சில பேச்சும்
இன்றும் ஒலிக்கும்,
ஏது செய்வேன்
அவை மீண்டும் கேட்க.
மாமா, சிட்டு குருவி கூட்டம்
இன்று தலைவன் இன்றி,
சிரிப்பொலி சற்று அமைதியானதேனோ.
அண்ணை, நீ இன்றி, இன்று வழி ஏது?
கனவிலெனும் வா, வழி காட்டு!
என் காவலனே, இன்று என் சாமியாய்!!
பெப்பா (பெரியப்பா), என் நண்பன் நீர்,
என் மனதின் அரணாளர் நீர்,
இன்று அவை இன்றி,
ஆனால் என்றும் என் நினைவில்..!