யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராஜதுரை அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசா(லண்டன்), வனுசா(சுவிஸ்), காலஞ்சென்ற கிரிஜா, தனுசா(சுவிஸ்), மயூரன்(பிரான்ஸ்), சைலஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நோதனராஜா, இளந்திரையன்(சுவிஸ்), குணசீலன்(சுவிஸ்), உமா(இலங்கை), விஜயேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, பொன்னுத்துரை, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, நடராஜா மற்றும் சறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகநாதன், தனநாயகம், உலகநாதன் மற்றும் பரமேஸ்வரி, ஜோதீஸ்வரி, தனலட்சுமி, காலஞ்சென்ற ரூபசிங்கம் மற்றும் விவேகானந்தன், சிவஞானம், ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்ஷன், விஸ்னுப்பிரியா, மானுசா, ஓவியா, கீர்த்திகா, அக்ஷயா, அஜித்தா, சஞ்சய், வியோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தன்னைச் சூழ்ந்த எல்லோரையும், கவலைகளை மறந்து, என்றும் கலகலவென சிரிக்கவைத்த குணாம்சத்திற்கு சொந்தக்காரரான இராஜதுரைச் செம்மல் எமைப் பிரிந்துள்ளார்கள்.அவருக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகுக!...