Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1932
இறப்பு 15 AUG 2020
அமரர் நல்லம்மா சோமசுந்திரம் 1932 - 2020 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சோமசுந்திரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
நிரப்ப முடியாத வெற்றிடத்தை
உருவாக்கி எம்மை நிலை
தடுமாற வைத்தீர்கள்!!!
ஆசைகள் காட்டியா
எங்களை வளர்த்தீர்கள்
இல்லையே பாசத்தையே
காட்டியெல்லோ எங்களை வளர்த்தீர்கள்!

இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே எமக்கு தாயாக
வேண்டும் அம்மா!



தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்