திருகோணமலை ஐயனார் கேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பத்மநாதன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியை மற்றும் ஆத்மசாந்தி பிரார்த்தனை அழைப்பிதழ்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி!
வீட்டு முகவரி:
இல.17/5, ஐயனார் கேணி,
திருகோணமலை.
Always in our thoughts With love and gratitude Pavan, Sathees and Nemashi