
திருகோணமலை ஐயனார் கேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- திரயோதசி பூர்வபட்சம்
திதி திகதி:- 05-09-2025
ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்து
மரணத்தில் மட்டும் என்னை விட்டுச் சென்றீர்களே
உங்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை பொன்னால்
பொறிக்கப்பட வேண்டியது......
டாலா டாலா என்று கூப்பிட்ட ஒலி மௌனித்து விட்டது.
தினமும் ஆலடியானுக்கும், காளி ஆச்சிக்கும் பூக்களை கொடுத்து
உங்களது ஆத்மாவும் பூப்போலவே பிரிந்து விட்டதே.
மனிதருள் மாணிக்கமாக
வாழ்ந்து மறைந்து விட்டீர்களே......
உங்கள் காலடி சேரும் வரை உங்கள் எண்ணம் என் மனதில்
கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும்.
உங்கள் பிரிவால் துயரும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
வேனுகீதன் குடும்பம், கோணேஸ் குடும்பம், பவனகுமார் குடும்பம், சதீஸ்குமார் குடும்பம்,
நிமாசலா குடும்பம், லக்ஷியிந்திரா குடும்பம், சரளா குடும்பம்,
குமாரி குடும்பம், கலா குடும்பம், இளங்கீரன் குடும்பம்.