யாழ். அன்னச்சத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கேதீஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்பின் இலக்கணமாய் திகழ்ந்து
பாசத்தின் வடிவிடமாய் வாழ்ந்து
வீடுதேடி வந்தோரை இன்முகத்தோடு வரவேற்று
விருந்தோம்பும் உங்களை இனி எப்போது காண்போம்
நித்தம் நித்தம் தவிக்கின்றேன் உங்கள் துணையின்றி
தினம் தினம் உங்கள் கரம் கோர்த்து நடந்திட்ட பாதைகளில்
நீங்கள் வருவீர்கள் என்று என் இதயம் ஏங்குகின்றது
இனி நீங்களின்று எப்படி நான் வாழ்வேன் தனிமையில்
இருந்தும் வாழ்கின்றேன் உங்கள் நினைவுகளோடு
பிள்ளைகள் வளர்ப்பது பெற்றோரின்
கடமை என்பதையும் மீறி உங்கள் எல்லையற்ற
அன்பால் அரவணப்பால் எங்களை சிறப்புற வாழ வைத்து
அதைப் பார்த்து மகிழாமல் பாதியில் சென்றதேனோ?
அப்பா உங்கள் அன்புக்கும் அரவனைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும்
உங்கள் பிள்ளைகள் ஆகும் வரம் வேண்டும் அப்பா
மீண்டும் ஒருமுறை எப்போது நீங்கள் வருவீர்கள்
எங்களை எல்லாம் ஒன்று கூடி அரவணைக்க
என்றும் உங்கள் நினைவுகளோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள்,
மைத்துனிகள், சகலன்மார்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.