Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 DEC 1970
இறப்பு 27 SEP 2023
அமரர் சொக்கலிங்கசிவம் சிவசுந்தர்
வயது 52
அமரர் சொக்கலிங்கசிவம் சிவசுந்தர் 1970 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கசிவம் சிவசுந்தர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மகனே பிரிவு என்பது எங்களிடம் இருந்ததே இல்லை
நாம் விட்டு வாங்கும் சுவாசம் பற்று நினைவுகள் உணர்வுகள்
எல்லாமே ஒன்றித்தது என்றும் நாங்கள் ஒரு போர்வைக்குள்
வாழ்ந்தோம் வாழ்வோம் என்பதுவும் உனக்கு தெரியும் மகனே!
பாசம் பற்று மகற்பேற்றில் மிகவும் ஆழமானது என்பது
 எமக்கும் மகற்பேற்ரை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும்

இனிமேலும் எந்த தாய் தந்தையருக்கும் இந்த அவலநிலை
நிகழ்ந்து விடக்கூடாது

உமது அம்மா, அப்பா, சகோதரிகள், உறவுகள்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்