யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கசிவம் சிவசுந்தர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-10-2024
யாழ் தீவக புங்கையூர் மண்ணின் மைந்தன்
சிவசுந்தர் இறைவன் பாதம் சேர்ந்து
ஓராண்டு கடந்த பின்னும்
புன்னகை பூத்த உன் வதனம்
நெஞ்சத்தில் எம் நினைவுகளாய்
என்றென்றும் நிற்கின்றது.
உன்னை எண்ணும் போது
எங்கள் மனக்கண்களில் தோன்றுவது
என்றும் புன்னகையுடன்
தோன்றும் உன் வதனம்
உன் அன்பான பேச்சும்
உற்றார் உறவுகளுக்கு
ஆறுதல் அளிக்கும் வகையில்
அன்புடனும் என்றும் சேவை
மனப்பாங்குடன் பழகும் தன்மையும்
என்றும் புன்னகையுடனும்
எளிமையுடனும் தோன்றும்
உன் முகத்தை இனி என்று காண்போம்?
உன் குரலை இனி என்று கேட்போம்?
மகனே என்று, அண்ணா என்று,
மாமா என்று, பெரியப்பா என்று,
மச்சான் என்று அழைக்க யாருண்டு
இந்தப் பாரினிலே.
உன் பிரிவுத்துயரால் வாடி நிற்கும்
எங்கள் குடும்பத்தினருக்கு
ஆறுதல் கிடைக்க
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!