

திதி: 12-08-2023
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் அண்ணா வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் யோகரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயத்தில் நீங்காத எம் அருமைத்தலைவனே, தந்தையே!
எம் அன்பு பாதையில் ஒளியேற்றிய ஒளிச்சுடரே!
எம்மையெல்லாம் பேணிக்காத்து சுமை
தாங்கியாய் வாழ்ந்து வந்த என்னவரே!
அப்பாவே! உங்களின் இன்முகமும்
சாந்தமான
கணீரான பேச்சும்
காண்பது இனி எப்போதோ அப்பா?
"சட்டென்று வந்த செய்தி சடுதியாய்,
கேட்டு ஓராண்டு ஓடிவிட்ட"
நாளையென்னி நிதம் நிதம்.
அப்பாவே பரிவு தரும் பரமனவன்
துவாதசி திதியிலே சொர்கலோகம் சேர்த்தாரோ.
எம் உள்ளங்களில் இருந்து வரும் கண்ணீரை
காணிக்கையாக்குவது எம் மனங்களின் ஆறுதலா!
நினைக்கவே மனது வெதும்பி
கூனிக் குறுகி நிற்கின்றோம்.
தங்களின் தரணியிலே!
மண்ணுலகத்தில் பிறவி மாசற எண்ணிய
பொருளெல்லாம் எளிதினில் கண்ணுதல்
உடையாதோர் களிற்று மாமுகப் பண்ணுவன
மலரடி பணிந்து போற்றுவோம். ஓம் சாந்தி...