யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் கோபாலசிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்.
கவிதை வடித்தோ இல்லை
கண்ணீர் வடித்தோ சோகத்தை
ஆற்றிக்கொள்ள முடியாது!
உயிரைப் பறித்தவனுக்கு
உணர்வுகள் இருக்குமா -உன்
அருகில் இருந்தவளுக்கு
இதயம் தான் துடித்ததா!
தாயின் கருவறையில் முதல்
உருவாய் உதித்தவன் நீ
உன் உடன் பிறப்புக்களுடன்
ஒரு வார்த்தையேனும் இயம்பாமல்
உதிர்ந்த மாயம் என்ன!
உன் இறப்பின் மர்மம் தான் என்ன!
தெருவில் தெரிந்தவனுக்கும்
தகவல் சொல்லும் மனித நேய உலகில்
கருவறை சொந்தங்கள் எமக்கு
தகவல் சொல்ல உன் மனையாளுக்கு
மனம் வரவில்லையே!
கருவறையில் எமக்கு முன்
உதித்தவன் நீயல்லவோ
நீ நோயால் வீழ்ந்தாய் என்பது
நம்ப முடியவில்லையே!
எங்கள் குலத்தின் முதல் விளக்கே!
எங்கள் உதடுகளின்- முதல்
உச்சரிப்பே அண்ணா!
நீ பற்ற வைத்த தீப ஒளி தான்
எங்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது.
எங்கள் இதயங்கள் நொறுங்க
இமைகள் ஈரமாக
சிறகுடைந்த பறவையாய் துடிக்கிறோம்!
உன் கடைசி நிமிடத்தில்
என்ன நினைத்து இறந்து போனாய்!
உன்னை பெற்றவளை
உன்னுடன் கூடப் பிறந்தவர்களை
எவருடனும் கதைக்க விரும்பவில்லையா - இல்லை
உன் அருகில் இருந்தவள் விரும்பவில்லையா?
நீ உயிருடன் எங்களை படிப்பித்தாய்
இறந்த பின்னும் படிக்கிறோம்
உன் மனையாள் மூலமாக
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 01-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் எமது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.