1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்ஷணாமூர்த்தி மஹாலட்சுமி தம்பதிகளின் புதல்வியும் ஆவார்.
சிந்தை கலங்கி சிந்திடும் விழிநீருடன்
எம் சகோதரியே உனைத் தேடுகிறோம்!
ஆண்டொன்று சென்றாலும்
ஆறவில்லை நம் நெஞ்சம்
அன்பான எம் உடன்பிறப்பே
அவனி விட்டு ஏன் சென்றாய்?
உந்தன் நினைவுகள் மலராகி
உதிரும் கண்ணீர்த்துளிகளை மாலையாக்கி
இறைவன் பாதங்களில் காணிக்கையாக்குகிறோம்!
உன் ஆத்மா சாந்தியடையட்டும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
தகவல்:
சகோதரர்கள்