2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவயோகலட்சுமி மார்கண்டு
(செல்லம்மா)
வயது 98

அமரர் சிவயோகலட்சுமி மார்கண்டு
1925 -
2023
யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்லைப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகலட்சுமி மார்கண்டு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவளே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும் மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும் எல்லாமே
உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும் அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்